Theme Check

கீழே இறங்கு.. மீனவப் பெண்மணிக்கு ஏற்பட்ட அவமானம்..!

கீழே இறங்கு.. மீனவப் பெண்மணிக்கு ஏற்பட்ட அவமானம்..!

கீழே இறங்கு.. மீனவப் பெண்மணிக்கு ஏற்பட்ட அவமானம்..!
X

செங்கல்பட்டு அருகே, மீனவப் பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கொக்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (52). இவர், இன்று காலை வியாபாரத்திற்காக 10,000 ரூபாய்க்கு மீனை ஏலம் எடுத்து அதை கூடையில் வைத்து மாமல்லபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் (தடம் எண் 515 பேருந்து எண் TN-01-AN -1842) பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது, அந்தப் பேருந்தின் நடத்துனர் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி, செல்லம்மாளை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.

இந்தப் பேருந்தில், இந்த நடத்துனர் பணியில் இருந்தால் மட்டுமே பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தாம்பரம் மாநகர பேருந்து பணினை மேலாளர் பால சுந்தரத்திடம் கேட்டதற்கு, “நான் விடுப்பில் இருக்கிறேன். பேருந்தில் லக்கேஜ் ஏற்றலாம். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம், கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி என்ற மீன் விற்பனை செய்யும் பெண் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய போது, நாற்றம் அடிப்பதாக கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் நிகழ்ந்தது.

Next Story
Share it