உடனே கடைக்கு கிளம்புங்க..!! 2 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.704 குறைந்தது..!!
உடனே கடைக்கு கிளம்புங்க..!! 2 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.704 குறைந்தது..!!

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம்.மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2005ம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 600 ரூபாய்.தற்போது ஒரு கிராம் ரூ.4,600 வரை உயர்ந்துள்ளது

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ந்து உயர்வு கண்ட தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருவது மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது...ஜனவரி 26 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,096 ஆக இருந்த விலை தற்போது 36,392 ஆக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 704 ரூபாய் குறைந்துள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,392-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, ரூ.4,549-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.66,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

