அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் NO ENTRY போடா முடியாது.. எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ !!
அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் NO ENTRY போடா முடியாது.. எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ !!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பிரபல நடிகர் விஜய்-க்கும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே உள்ள பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது என எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை உள்ளது உண்மைதான் நான் அதை மறுக்கவில்லை. விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மன கசப்பும் இல்லை.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை. தனது மகன் விஜய்யுடனான அவரது உறவை மேலும் மோசமாக்கும் சாத்தியம் கொண்ட அந்த செய்தியை மறுத்தார். சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுத்த ஒரு தமிழ் வார இதழ் தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளதாக கூறினார்.
அந்த பேட்டியில் நான் சொல்லாத ஒன்று இருந்தது. அதில் ஷோபாவும் நானும் விஜய்யின் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும்படி கூறப்பட்டோம் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொன்னார், அதன் காரணமாக நானும் ஷோபாவும் (அவரை சந்திக்காமல்) திரும்பினோம் என கூறி இருப்பது உண்மை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆம், எனக்கும் விஜய்க்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், விஜய் மற்றும் ஷோபா இடையே எந்த கசப்பும் இல்லை. இருவரும் அடிக்கடி பேசுவார்கள், சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், என்று சந்திரசேகர் வீடியோவில் கூறி உள்ளார். இயக்குநராக இருந்த எஸ். ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். அவர் வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுப்பதற்கு முழு முதற்காரணம் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்தான்.
அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் NO ENTRY போடா முடியாது 😀 @actorvijay@SunTV @sunnewstamil @polimer88 @BBCBreaking @bbctamil @News18TamilNadu @news7tamil @galattadotcom @behindwoods @igtamil @PTTVOnlineNews @vikatan @maalaimalar @toptamilnews pic.twitter.com/DStU9b9C2h
— S A Chandrasekhar (@Dir_SAC) September 28, 2021
விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது வரை அனைத்திலும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருக்கு முழு பங்கு உள்ளது. ஆனால் அண்மையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் எஸ்.ஏ.சி பதிவு செய்ததே பிரச்னைக்கு காரணம். பின்னர் அந்த முடிவு திரும்பபெறப்பட்டு நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்றுள்ளது.
newstm.in

