கோவில்களில் கடவுள் மட்டுமே விஐபி : நீதிமன்றம் அதிரடி!!
கோவில்களில் கடவுள் மட்டுமே விஐபி : நீதிமன்றம் அதிரடி!!

கோவில்களில் விஐபி தரிசன முறையால் சாதாரண பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கவலை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களை ஒழங்குபடுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
விஐபி சிறப்பு தரிசனம், கடவுளை காண காத்திருக்கும் பொது பக்தர்களின் சம உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது எனவும், ஒருவேளை இடையூறு செய்தால் அந்த பாவம் செய்த விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

பக்தர்களின் பொது தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் விஐபி தரிசனம் நடைபெறுவதை, கோவில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். விஐபி அனுமதி சீட்டுகளில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
காவல் துறையினர், கோவில் பணியாளர்கள் மற்றும் பூசாரிகள் உள்ளிட்டோர், பக்தர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
newstm.in

