Theme Check

அரசுப் பள்ளிக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை காட்டுகிறது.. முதல்வர் அதிரடி பேச்சு..!

அரசுப் பள்ளிக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை காட்டுகிறது.. முதல்வர் அதிரடி பேச்சு..!

அரசுப் பள்ளிக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை காட்டுகிறது.. முதல்வர் அதிரடி பேச்சு..!
X

நடப்பு ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹமீர்பூர் நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; “இமாச்சலப் பிரதேசத்தில் 14 லட்சம் மாணவ - மாணவியர் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் 8.5 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 5.5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.
BJP Scared Of AAP, Announcing Sops In Himachal: Arvind Kejriwal
அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது. இந்த 8.5 லட்சம் மாணவர்களின் வருங்காலம் தொடர்ந்து இருண்ட நிலையில் உள்ளது.

2 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார். 722 பள்ளிகள் ஒரே ஒரு அறையை மட்டும் கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Next Story
Share it