பாலிஷ் செய்வதாக கூறி தங்க நகை திருட்டு...!!
பாலிஷ் செய்வதாக கூறி தங்க நகை திருட்டு...!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த இரண்டு நபர்கள் பாம்பன் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருக்களாக சென்று வெள்ளி, தங்க செயினுக்கு பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பாம்பன் பாரதியார் தெருவைச் சேர்ந்த 25 வயதான சங்கரி என்ற பெண் தன் வீட்டில் இருந்த இரண்டு கொலுசுகளை பாலீஷ் போட வடமாநிலத்தவரிடம் கொடுத்துள்ளார்.
கொலுசை வாங்கிய வாலிபர்கள், அதை பளபளப்பாக பாலீஷ் போட்டு அப்பெண்ணிடம் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் அவரது கழுத்தில் அணிந்த தங்க நகைக்கு பாலீஷ் போட கேட்டு நகையை வாங்கிய வாலிபர்கள், அதை ரசாயனம் கலந்த திரவத்தில் போட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தங்கச்செயினின் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் வாலிபர்களிடம் கேட்க, சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் வடமாநில வாலிபரை பிடித்து தென்னைமரத்தில் கட்டி வைத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் வந்த போலீசார் பிடிபட்ட வாலிபரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மற்றொரு வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

