தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கள் முதலீடுகளை தங்கத்தில் மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளான நேற்று (1-ம் தேதி) சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் 856 ரூபாய் உயர்ந்து, 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராமின் விலை 107 ரூபாய் உயர்ந்து, 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (2-ம் தேதி) மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் 4,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

