Theme Check

ரூ.33,000 இறங்கிய தங்கம் விலை - சந்தோஷத்தில் மக்கள் !!

ரூ.33,000 இறங்கிய தங்கம் விலை - சந்தோஷத்தில் மக்கள் !!

ரூ.33,000 இறங்கிய தங்கம் விலை - சந்தோஷத்தில் மக்கள் !!
X

கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணை முட்டிய தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது. ஊரடங்கின் போது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.குறிப்பாக தங்கம் வாங்க நினைப்போர், திருமண நிகழ்ச்சி வைத்திருப்போருக்கு ஒரு இடியாக அமைந்தது.

இந்நிலையில் தங்கத்தின் விலை சிறிது நாட்களாக தொடர் சரிவில் இருந்து வருவது மக்கிளிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,904க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.26 ஆக குறைந்து, ரூ.4,238 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 72,800 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 1,200 குறைந்து 71,600 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it