தங்கம் விலை அதிரடி உயர்வு!! பொதுமக்கள் அதிர்ச்சி!!
உச்சத்தில் தங்கம் விலை!! பொதுமக்கள் அதிர்ச்சி!!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்வதால் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கல்யாண கனவுகளோடு காத்திருந்தவர்களுக்கு தங்கத்தின் தொடர் விலை ஏற்றம் அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸும் தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பங்கு சந்தை நிலவரமும் மந்த கதியில் செல்வதால், முதலீட்டாளர்கள், பாதுகாப்பான முதலீடு என்று தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருவதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.128 அதிகரித்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.1024 அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.4,153க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,024 அதிகரித்து ரூ.33,224க்கு விற்கப்படுகிறது.
newstm.in

