மீண்டும் ரூ.34,000-க்கு உயர்ந்த தங்கம் விலை !!
மீண்டும் ரூ.34,000-க்கு உயர்ந்த தங்கம் விலை !!

நம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர். அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது.
கொரோனா முடக்க காலத்தில் தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது அதாவது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

கடந்த சில நாட்களாக குறைந்த வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,000-ஐ கடந்தது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,064-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து, ரூ.4,258-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

