மக்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை ..!!
மக்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை ..!!

இந்திய பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்துள்ளது இந்த தங்கம் என்று சொல்லலாம். குண்டுமணி அளவாவது தங்கம் சேர்க்க வேண்டும் என்பதே நம்மில் ஒவ்வொருவரின் கனவாகும். இதை அணிகலனாக அணிவது தனிநபரின் பெருமையைப் பறைசாற்றுவதாக உள்ளது.
தங்கத்தை அனைவரும் விரும்பு வதற்கு முக்கியமான காரணம், அதை விரைவாகப் பணமாக்கிக்கொள்ள முடியும் என்பதே ஆகும். கடன் வாங்குவதற்கு முக்கியமான காரணம், நகைகளை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பதால்தான்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வைத்திருப்போர்களுக்கு. ஏனென்றால் கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்துள்ளது

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரூ.36,016க்கு விற்பனையான தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.36,056ஆக அதிகரித்தது. நேற்றும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து ரூ.36,328க்கு விற்பனையானது. இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,552-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, ரூ.4,569-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.73,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


