மீண்டும் ரூ.34,000 ஐ நெருங்கும் தங்கம் விலை !!
மீண்டும் ரூ.34,000 ஐ நெருங்கும் தங்கம் விலை !!

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்கம் வாங்க இது உகந்த நேரம் என்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் உச்சத்தை அடைந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருவதையே இதற்கு காரணம்.

உலக அளவிலான தங்கம் இறக்குமதியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கவும், இதன்மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் தங்க பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதுதவிர, தங்க டெபாசிட் தி்ட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். ஏனெனில், இந்திய மக்கள் தங்கத்தை முதலீடாக மட்டுமின்றி புனித உலோகமாகவும் கருதுவதால், ஆபரண தங்கமாக வாங்குவதையே விரும்புகின்றனர்.

சில தினங்களாக தொடர்ந்து சரிவில் இருக்கும் தங்கத்தின் விலை தற்போது தங்கத்தின் விலை இன்று காலை சற்று உயர்ந்துள்ளது அதாவது சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,824-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து, ரூ.4,228-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.70,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

