தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.288 சரிவு
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.288 சரிவு

தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.192 குறைந்த நிலையில் மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,232-க்கு விற்பனையாகிறது. நேற்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,565க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 36 குறைந்து ரூ. 4,529க்கு விற்பனையாகிறது.
அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 192 குறைந்து ரூ. 36,328-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை மேலும் ரூ.96 குறைந்து ரூ.36,232க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 73,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 37,000க்கு கீழ் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

