Theme Check

தங்கம் விலை மீண்டும் சரிந்தது...!!

தங்கம் விலை மீண்டும் சரிந்தது...!!

தங்கம் விலை மீண்டும் சரிந்தது...!!
X

நாட்டின் உள்ள பெரும்பாலான ஏழை மக்களின் கனவு என்பது தங்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு முதலீடாக சேர்த்து வைக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்களால் தங்கத்தை ஒரே நேரத்தில் 50 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்து வாங்குவது என்பது இயலாத காரியம்.இதை உணர்ந்த தங்க நகை விற்பனை கடைகள் அவர்களுக்காக தங்க நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளன.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,200-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ரூ.4,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it