தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் குறைவு !! நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!
தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் குறைவு !! நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!

நம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர். அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது.
கொரோனா முடக்க காலத்தில் தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது அதாவது சாமானியர்கள் இனி தங்கம் வாங்க முடியுமான என்ற மோசமான நிலை உருவானது. இந்தியாவில் தங்கம் இல்லாமல் எந்தச் சுப காரியங்களும் நடக்காது என்பதால் நம்முடைய வாழ்க்கையில் தங்கம் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை. இப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்த காரணத்தால் மக்கள் கவலையில் அடைந்தனர்.
நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் குறைக்கப்பட்டது. இன்று காலையிலும் விலைச் சரிவு நீடிப்பதால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை ஒரு சவரன் நேற்று 35,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ரூ.35,504-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, ரூ.4,438-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று இதன் விலை 4,465 ரூபாயாக இருந்தது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

