மீண்டும் ரூ.34,000 கீழ் இறங்கிய தங்கம் விலை !!
மீண்டும் ரூ.34,000 கீழ் இறங்கிய தங்கம் விலை !!

கொரோனா முடக்க காலத்தில் தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது அதாவது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சிறிது நாட்களாக தொடர் சரிவில் இருந்து வருவது மக்கிளிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. இன்று சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,728-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, ரூ.4,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.69,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

