தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்தது..!
தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்தது..!

கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் உள்ளனர்.இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,080-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 76,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.76,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

