Theme Check

தங்கம் விலை அதிரடி குறைவு! தங்கத்தில் முதலீடு செய்ய சரியான காலம் இது தான்!

தங்கம் விலை அதிரடி குறைவு! தங்கத்தில் முதலீடு செய்ய சரியான காலம் இது தான்!

தங்கம் விலை அதிரடி குறைவு! தங்கத்தில் முதலீடு செய்ய சரியான காலம் இது தான்!
X

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் தங்கம் விலையும் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டியது. ஆனால் அதற்கு பிறகு தங்கத்தின் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

தங்கத்தின் விலை நிர்ணயம் உலக சந்தையின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்ததால் அப்போது தங்கத்தின் விலை அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது முடக்கம் ஏதும் இல்லாதால் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்படுவதை அடுத்து தங்கத்தின் விலை குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து ரூ.4,266க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் 4,654 ரூபாய்க்கும், சவரன் 37,232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it