Theme Check

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது...

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது...

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது...
X

எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று வாழவேண்டுமென்பதே அனைவரது விருப்பம். அதற்காகவே வாழ்க்கையை திட்டம் தீட்டி, பல வழிமுறைகளை கையாண்டு சாதுர்யமாக முன் நடத்தி செல்கிறோம். அதனால்தான், ஏதாவது ஒரு நல்ல காரியம் வீட்டில் நடப்பதாக இருந்தாலும் சரி, வீடு மற்றும் தங்கம் வாங்குவதாக இருந்தாலும் சரி, நேரம் காலம் பார்த்து தொடங்குவது வழக்கமாக உள்ளது. அப்படி தொடங்கும் போது வாழ்க்கை செழிப்பாகும் என்பது நமது நம்பிக்கை.

குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர். அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது.இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,480-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ரூ.4,435-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it