தங்கம் விலை இன்று குறைவு !!
தங்கம் விலை இன்று குறைவு !!

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்றும் இன்றும் சற்று குறைந்தது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,240-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,405-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

