Theme Check

உயர்வில் தங்கம் விலை ..!! மக்கள் அதிர்ச்சி

உயர்வில் தங்கம் விலை ..!! மக்கள் அதிர்ச்சி

உயர்வில் தங்கம் விலை ..!! மக்கள் அதிர்ச்சி
X

பெட்ரோல்,டீசல்,கேஸ் சிலிண்டர் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.

இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் கவலையில் ஆழ்ந்தனர். கடந்த வருடம் தங்கித்தின் விலை 43 ஆயிரத்தை நெருங்கியது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது அதே நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

தங்கம் விலை ஏறுவதோ ராக்கெட் வேகத்தில் ஆனால் இறங்குவதோ ஆமை வேகத்தில் என மக்கள் புலம்பி வருகின்றனர்.தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து, ரூ.4,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.67,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it