பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை உயர்வு ..!!
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை உயர்வு ..!!

நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் குறைவதும், மறுநாளே அதிரடியாக உயர்வதும் தங்கத்தின் வாடிக்கையாகவே உள்ளது. நகை என்பது பெண்களுக்கு பிடித்தமானவை. கொரோனா காலத்தில் தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் அதன் மீதான மோகம் மற்றும் சற்றும் குறையவில்லை என்பதே உண்மை.
இந்த மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பொங்கல் பண்டிகை ஒட்டி ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,896-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,487-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.64,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.