தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்வு !!
தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்வு !!

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,760-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ரூ.4,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39632-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.76,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

