சில தினங்களாக குறைந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு - மக்கள் அதிர்ச்சி !!
சில தினங்களாக குறைந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்வு - மக்கள் அதிர்ச்சி !!

கடந்த சில தினங்களாக இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் முதல் நாளான இன்று ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தினமும் 100 முதல் 200 வரை இறங்கிய தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 512 ரூபாய் உயர்ந்தது தான் இதற்கு காரணம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,808-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து, ரூ.4,226-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in
Tags:
Next Story

