Theme Check

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது...

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது...

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது...
X

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது. இருப்பினும், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,784-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.76,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it