தங்கம் விலை அதிரடியாக உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் தாக்கம் எதிரொலியாக தங்கம் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.808 ஆக உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568 ஆக விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ 5, 071 ஆகவும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.43,496 க்கும் கிராம் ரூ.5,437 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.30 உயர்ந்து ரூ .75.70 க்கும், கிலோ வெள்ளி ரூ.75.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
newstm.in

