Theme Check

தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக உயர்ந்தது...

தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக உயர்ந்தது...

தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக உயர்ந்தது...
X

நாளுக்கு நாள் உயர்ந்து எட்டாக் கனியாகிவரும் தங்கத்தின் மீது எப்போதுமே தமிழர்களுக்கு ஒரு மதிப்பு உண்டு. இதனாலேயே விழாக்காலங்களிலும், விசேஷ நாட்களிலும் தங்க நகைகள் அணிந்து கொள்வது தொன்று தொட்டு வரும் பழக்கமாகிப் போனது. எனவே, பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்த பெருந்தொகையை செலுத்தி தங்க நகைகளை வாங்குவர்.

தங்கத்தை நகையாக அணிந்து கொள்ளவும், எதிர்காலத்திற்கான சேமிப்பாக வைத்துக் கொள்ளவும் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு எப்போதும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,664-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,458-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.68,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it