Theme Check

தொடர் உயர்வில் தங்கத்தின் விலை.. மக்கள் அதிர்ச்சி ..!!

தொடர் உயர்வில் தங்கத்தின் விலை.. மக்கள் அதிர்ச்சி ..!!

தொடர் உயர்வில் தங்கத்தின் விலை.. மக்கள் அதிர்ச்சி ..!!
X

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டில் நடைபெறும் காது குத்து, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம், கோவில் விழா போன்ற அனைத்து விஷேங்களிலும் தங்கத்தை வைத்தே விழாக்கள் நடைபெறுகின்றது. மேலும், திருமணத்தின் போது, பெண் வீட்டார் தங்களது மகளுக்கு ஒரு குண்டுமணி் அளவாவது தங்கத்தை போட்டு அழகு பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. தங்கம் இன்றி எந்த விழாவும் நடைபெறுவதில்லை. இதனாலேயே தமிழக மக்கள் தங்கத்தை தங்களது வீட்டில் ஒரு அங்கமாக வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகிப் போன தங்கத்தின் விலை தாறுமாறாக எகிறி வருவதால் திருமணத்தை எதிர் நோக்கியுள்ள பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,136-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ரூ.4,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.64,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it