தங்கம் விலை கிராமுக்கு சற்று உயர்ந்தது !!
தங்கம் விலை கிராமுக்கு சற்று உயர்ந்தது !!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் வேலைவாய்ப்பிழப்பு மக்களைப் பாதித்து வரும் நிலையில் மற்றொரு பக்கம், நாளுக்கு நாள், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, ரூ.4,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 600 ரூபாய் குறைந்து ரூ.75,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

