குட் நியூஸ்! வாரத்துக்கு 7 கோடி தடுப்பூசி! அறிமுகமாகும் 4வது தடுப்பூசி!
குட் நியூஸ்! வாரத்துக்கு 7 கோடி தடுப்பூசி! அறிமுகமாகும் 4வது தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டுக்கு இருக்கும் நிலையில் விரைவில் மற்ற நாடுகளின் தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் . "பயாலாஜிக்கல் இ " நிறுவனத்தின் புதிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைமுடிவுகள் கிடைத்தவுடன் பொதுமக்கள் அதை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் "பயாலாஜிக்கல் இ " நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியாக "பயாலாஜிக்கல் இ " நிறுவனத்தின் தயாரிப்பு இருக்கும்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. "பயாலாஜிக்கல் இ " நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவின் 4வது கொரோனா தடுப்பூசியாக இது இருக்கும்.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வாரத்திற்கு ஏழு கோடி தடுப்பூசிகளை தயாரிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பயாலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.

