குட் நியூஸ்! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா!!
குட் நியூஸ்! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1.28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,25,940 என்றாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,624 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்துள்ளனர்.

தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,03,926 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,84,470 என்றாகியுள்ளது.
இவையன்றி இன்று ஒரு நாளில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
சென்னையில் 3,998 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து கோவையில் 2,895, செங்கல்பட்டில் 2,426 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
newstm.in

