குட் நியூஸ்! ஏப்ரல் 19ம் தேதி முதல், 18 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!
குட் நியூஸ்! ஏப்ரல் 19ம் தேதி முதல், 18 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த செய்திக்குறிப்பில் ஏப்ரல் 19 முதல் 18 வயது பூர்த்தியான அனைவரும் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பைடன் உரையில் தனது 75 நாட்கள் பதவி காலத்தில், இதுவரை அமெரிக்காவில் 15 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 100வது நாள் பதவி காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளார். சில நாட்களாக அமெரிக்காவில் புதிய வகை கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் இவைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

