Theme Check

குட் நியூஸ் !! கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு !!

குட் நியூஸ் !! கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு !!

குட் நியூஸ் !! கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு !!
X


இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 3,44,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 37,04,893 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 18,75,515 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 31,13,24,100 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 17 கோடியே 92 லட்சத்து 98 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it