Theme Check

குட் நியூஸ் !! தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை..!

குட் நியூஸ் !! தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை..!

குட் நியூஸ் !! தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை..!
X

நம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் என்றால் அது தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர். அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஒரே நாளில் ரூ.616 குறைந்ததால் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,640-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, ரூ.4,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it