Theme Check

குட் நியூஸ் !! இந்தத் திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

குட் நியூஸ் !! இந்தத் திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

குட் நியூஸ் !! இந்தத் திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!
X

நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தது.

இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரியும் இடத்திலும், அவர்களின் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்படாத இடத்திலும் ரேஷன் பெற அனுமதிக்கிறது.

மேலும், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் வலியுறுத்தி உள்ளது.

Tags:
Next Story
Share it