Theme Check

குட் நியூஸ்.. உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு..!

குட் நியூஸ்.. உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு..!

குட் நியூஸ்.. உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு..!
X

தமிழகத்தில், கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.72 ஆயிரமாக இருந்து வந்தது. இதை ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ.72,000 லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 3 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவியர் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it