குட் நியூஸ்.. எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
குட் நியூஸ்.. எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கு, ஏற்கனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தகுதியுள்ள காவலர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 01.07.1992 முதல் 01.07.2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதியில் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். WRITTEN EXAMINATION, PHYSICAL MEASUREMENT TEST, ENDURANCE TEST மற்றும் PHYSICAL EFFICIENCY TEST மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ம் தேதி (இன்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை கருத்தில் கொண்டு, இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

