Theme Check

அரியர் மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அரியர் மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அரியர் மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
X

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கடந்த 21-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறும்’ என அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம், தமிழகம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர்.

Next Story
Share it