Theme Check

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனிமேல் இந்த கட்டண முறை கிடையாது..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனிமேல் இந்த கட்டண முறை கிடையாது..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனிமேல் இந்த கட்டண முறை கிடையாது..!
X

“திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கோயிலில் ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையில் உள்ள 250 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது. 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.

இந்த இரண்டு தரிசன முறையிலும், மூலவரை இருவரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை மாற்றம் இன்று (9-ம் தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதேபோல், கோயில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசார் 125 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக, இன்று முதல் 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன முறையில் வரும் அனைத்து பக்தர்களும் மகாமண்டபத்தில் இருந்து ஒரே வழியில் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயரை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முறை படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை இன்று முதல் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்” என்று, கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை கூறினார்.

Next Story
Share it