மின் நுகர்வோருக்கு குட் நியூஸ்.. இன்று முதல் இந்தத் திட்டம் தொடக்கம்..!
மின் நுகர்வோருக்கு குட் நியூஸ்.. இன்று முதல் இந்தத் திட்டம் தொடக்கம்..!

தமிழகம் முழுவதும் உள்ள 3 கோடியே 60 லட்சம் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத்திட்டத்தை சோதனை முறையில் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, திட்ட செலவாக ரூ. 144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மின்துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல், மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன்மூலம், நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான வரவேற்பைப் பொறுத்து, தமிழ்நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

