ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. புதிய படங்களுக்கு இலவச டிக்கெட்..!
ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. புதிய படங்களுக்கு இலவச டிக்கெட்..!

அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் சார்பில் வரும் 15ம் தேதி, ‘தியேட்டர் குட்ஸ் டாட்காம்’ (theatre goods.com) என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் துவக்கப்படுகிறது. இதில், புதிய படங்களுக்கான இலவச டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து, அதன் தலைவர் பிரசாத் வசிகரன் கூறியதாவது: “எங்களது ஓடிடி இணையதளத்தில் பயனாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை வழங்குகிறோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க நூலகத்தையும், 1,000 படங்கள் மற்றும் தொடர்களையும் உருவாக்கி வருகிறோம்.
இப்போது, மிகக்குறைவான திரைப்படங்களே ஓடிடியில் வெளியாகின்றன. பெரிய படங்கள் பெரும்பாலும் தியேட்டரிலேயே வெளியாகின்றன. ரசிகர்கள் ஓடிடியில் படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கின்றனர்.
மேலும், தியேட்டர் அனுபவங்கள் வித்தியாசமானவை. இந்த இடைவெளியை நாங்கள் நிரப்ப விரும்புகிறோம். இந்தியாவில், தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களுக்கான இலவச டிக்கெட்டுகளையும் எங்கள் தியேட்டர் குட்ஸ் ஓடிடி தளத்தில் வழங்குகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

