குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. லிங்க் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. லிங்க் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!

“வரும் 23-ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்” என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “பிப்ரவரி 23-ம் தேதி முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 23-ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள். இதையடுத்து, குரூப் 2-ல் 116 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 2A நிலையில் 5413 காலிப் பணியிடங்களுக்கும் மே மாதம் 21-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடைபெறும்.
இந்தத் தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். ஆனால், மதியம் நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இந்த தேர்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு வகையாக எழுதலாம்.
அதன்படி, தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு 100 கேள்விகள் தமிழ் பாடத்திலும், பொது அறிவில் 75 கேள்விகளும், ஆப்டிடியூட் அளவில் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
அதேபோல், ஆங்கில மொழியில் எழுதுபவர்களுக்கு 100 கேள்விகள் ஆங்கில பாடத்திலும், பொது அறிவில் 75 கேள்விகளும், ஆப்டிடியூட் அளவில் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக, 200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் (23-ம் தேதி) முதல் மார்ச் மாதம் 23-ம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

