அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி.. இன்று வெளியாகிறது ‘வலிமை’ பாடல்கள்..!

அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி.. இன்று வெளியாகிறது ‘வலிமை’ பாடல்கள்..!

அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி.. இன்று வெளியாகிறது ‘வலிமை’ பாடல்கள்..!
X

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘வலிமை’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இன்று வெளியாகிறது
‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசையில், விக்னேஷ் சிவன் எழுதி, சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடல் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் முழு ஆல்பமும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முழு பாடல்களையும் கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Tags:
Next Story
Share it