Theme Check

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எண்ணெய் விலை குறைப்பு..!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எண்ணெய் விலை குறைப்பு..!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எண்ணெய் விலை குறைப்பு..!
X

இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் தொடங்கி மளிகைப் பொருட்கள், சமையல் கேஸ் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் அமைச்சகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் சில்லறை சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை ரூ.5 முதல் ரூ.20 வரை குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதனடிப்படையில் பார்க்கும்போது, நிலக்கடலை மற்றும் ஆமணக்கு எண்ணெய்யின் சில்லறை விலை அக்டோபர் 1-ம் தேதியை ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.3 வரை குறைந்துள்ளது. அதேபோல், சூரியகாந்தி, சோயா எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை குறைந்துள்ளது.

எனினும், சர்வதேச சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அவற்றின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it