நகை பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… தங்கத்தின் விலை குறைந்தது!!!
நகை பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… தங்கத்தின் விலை குறைந்தது!!!

தங்க நகைகள் என்றாலே பெண்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்துவது. எவ்வளவு நகைகள் இருப்பினும் இன்னும் அதை சேர்ப்பதிலும் அணிவதிலையும் ஆர்வம் காட்டுவார்கள். பெண்கள் இப்படி என்றால் ஆண்கள் அதை தங்களது முதலீடாகவும், கஷ்டத்திற்கு உதவும் பொருள்களாகவும் பார்க்கின்றனர். எனவே இந்த தங்க நகைகள் அதிக மவுசுகள் உடன் இருக்கிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலையானது ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அதன் விலை உச்சத்தை அடைந்த நிலையில் அதன் பின் சிறிது குறைந்தது அதன் பின் மெல்ல மெல்ல ஏறியும் இறங்கியுமாக வருகிறது.
இதனையடுத்து,தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,888-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, ரூ.4,486-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

