Theme Check

ஓபிசி பிரிவினருக்கு குட் நியூஸ்.. 27% இடஒதுக்கீடு செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

ஓபிசி பிரிவினருக்கு குட் நியூஸ்.. 27% இடஒதுக்கீடு செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

ஓபிசி பிரிவினருக்கு குட் நியூஸ்.. 27% இடஒதுக்கீடு செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
X

முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தக்கோரி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ மேற்படிப்பு : OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் - உச்ச  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து கடந்த இரண்டு நாட்களாக விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இன்று (7ம் தேதி) தீர்ப்பளித்தது.

அதில், “மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும்” என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

“மேலும், 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி வரையறை குறித்து மார்ச் 3-வது வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story
Share it