Theme Check

பயணிகளுக்கு நற்செய்தி… நாளை முதல் ரயில்கள் இயக்கம்..!

பயணிகளுக்கு நற்செய்தி… நாளை முதல் ரயில்கள் இயக்கம்..!

பயணிகளுக்கு நற்செய்தி… நாளை முதல் ரயில்கள் இயக்கம்..!
X

சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கியதால், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – புபனேஸ்வர் சிறப்பு ரயில் ஜூலை 2ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் இயக்கப்படும் என்றும், நாளை (1ம் தேதி) முதல் சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it