Theme Check

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!!
X

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

Ration-card

மாநிலம் முழுவதும் 34,777 ரேஷன் கடைகள் மூலம், 6.96 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் பொருட்கள் விநியோகம் செய்ய, 244 கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே ஒரு சில இடங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருந்ததாக புகார்கள் கிடைத்துள்ளது.

இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Ration-Shop

அதில், தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இவற்றை தவிர்க்கும் பொருட்டு கூட்டுறவு துறை அலுவலர்கள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் அரிசியை சரிபார்த்து அதன்பின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால் அதனை மீண்டும் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் தரமற்ற பொருளை தனியாக எடுத்து வைக்க வேண்டும். இதனை ஆய்வின் போது கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story
Share it