Theme Check

பள்ளி ஆசிரியர்களுக்கு 'நல்ல செய்தி': கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ...!!

பள்ளி ஆசிரியர்களுக்கு 'நல்ல செய்தி': கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ...!!

பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ...!!
X

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளிகளில் தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகளை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

counselling

அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் 11 முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 11-ம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஜூலை 12-ம் தேதி அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DPI

அதேபோல் ஜூலை 13-ம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it