Theme Check

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 3 மாதத்தில் மிதிவண்டி.. தமிழக அரசு அறிவிப்பு..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 3 மாதத்தில் மிதிவண்டி.. தமிழக அரசு அறிவிப்பு..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 3 மாதத்தில் மிதிவண்டி.. தமிழக அரசு அறிவிப்பு..!
X

தமிழகத்தில், 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய ஏற்கனவே ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: மூன்று மாதத்திற்குள் இவர்களுக்கு மிதிவண்டி – தமிழ்நாடு அரசு  அதிரடி அறிவிப்பு - Dinasuvadu Tamil

Next Story
Share it